Monday, August 15, 2022

மர்ஹூம் ரசீன் ஞாபகார்த்த கிண்ணத்தை ”பவர் பிளயர் 96” அணி கைப்பற்றியது..!

-யூ.கே.காலித்தீன்-

மர்ஹூம் ரசீன் ஞாபகார்த்த T10 மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கல்முனை சாஹிராக் கல்லுரி மைதானத்தில் நேற்று (14) இடம்பெற்றது.

"சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97” அணியின் தலைவர் அஞ்ஞபின் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற சுற்றுப் போட்டியானது ஒரு அணிக்கு 11 பேர் கொண்ட பத்து ஓவா்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டின் சம்பியினாக "பவர்பிளயர் 96” அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்து கொண்டனர். 

மர்ஹூம் ரசீன் ஞாபகார்த்த T10 மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ”சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97” மற்றும் ”பவர் பிளயர் 96” அணியினர்களுக்கிடையிலான மூன்று தொடர்களைக் கொண்ட சுற்றுப் போட்டியில் விளையாடிய ”பவர் பிளயர் 96” அணியினர் 1க்கு2 என்ற ரீதியில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

இறுதிச் சுற்றுப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ”பவர் பிளயர் 96” அணியின் தலைவர் ஏ.எம்.எம். சீர்கான் மௌலானா, தனது அணியினரை களத்தடுப்பினை எடுத்ததற்கு இணங்க ”சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97”  நிர்ணயிக்கப்பட்ட பந்து வீச்சு முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ”பவர் பிளயர் 96” அணியினர் 07 ஓவர்கள் முடிவில் 02 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 53 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சுற்றுப் போட்டியின் ஆட்ட நாயகனாக ”பவர் பிளயர் 96” அணியின் துடுப்பாட்ட வீரர் ஏ.எம். நஸ்வி தெரிவு செய்யப்பட்டதோடு சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக ”சஹிரியன்ஸ் சுப்பர் ஹீரோஸ் 97” அணியின் துடுப்பாட்ட வீரர் யு.பாஹிம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இச்சுற்றுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக மர்ஹூம் ரசீன் அவர்களின் சகோதரரான சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளரும் சிரேஸ்ட ஊடகவியளாலருமான ரியாத் ஏ.மஜிட் அவர்களும் மர்ஹூம் ரசீன் அவர்களின் பிள்ளைகளும் கலந்து கொண்டதோடு கௌரவ விருந்தினராக விக்டோரியஸ் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரும் சுவிஸ்லாந்தின் வதிவிட பிரதிநிதியுமான ஏ.எம்.எம்.பாறுக் மௌலானா மற்றும் இலங்கை வங்கின் கொழும்பு கிளையின் முகாமையாளரான ஏ.எம்.எம்.முஸ்தகீம் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.



No comments:

Post a Comment