Monday, June 3, 2024

கல்குடா தொகுதி ஐ.தே.க. அமைப்பாளராக கலாநிதி முஸம்மில் நியமனம்.!


-செயிட் ஆஷிப்-

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் - கல்குடா தேர்தல் தொகுதி பிரதம அமைப்பாளராக ஓட்டமாவடியைச் சேர்ந்த கலாநிதி எம்.பி. முஸம்மில்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலாநிதி எம்.பி. முஸம்மில் சுமார் இரண்டு தசாப்த கால அரசியல் அனுபவம் கொண்டவர். சமூக செயற்பாட்டாளர். இவர் கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டவராவார்.

No comments:

Post a Comment