Friday, December 29, 2023

கல்முனை மாநகர சபையில் கோலாகலமாக இடம்பெற்ற விருது விழா.!
















-ஏயெஸ் மெளலானா-

கல்முனை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான விருது விழா நேற்று வியாழக்கிழமை (28) லீ மெரிடியன் மண்டபத்தில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது 16 துறைகளில் இருந்து சிறந்த உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்ட 16 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த தொழில்நுட்ப உத்தியோகத்தராக வி.உதயகுமரன்,

சிறந்த நூலகராக ஏ.எல்.எம். முஸ்தாக்,

சிறந்த பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக யூ.எம்.இஸ்ஹாக்,

சிறந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக ஏ.ஜி. சித்தி நளீபா,

சிறந்த அபிவிருத்தி உத்தியோகத்தராக ஏ.எல். பாத்திமா சாஜிதா,

சிறந்த வருமான பரிசோதகராக கே. குணரட்னம்,

சிறந்த அலுவலக உதவியாளராக ஏ.எம்.ஜெமீர்,

சிறந்த நூலக உதவியாளராக எம்.எச். சுஹரா பீவி,

சிறந்த சாரதியாக அமலநாதன்,

சிறந்த மேற்பார்வையாளராக யூ.கே. காலிதீன்,

சிறந்த வேலைத் தொழிலாளியாக ஆர். இன்பராஜா,

சிறந்த சுகாதாரத் தொழிலாளியாக ஐ.அமிர்தீன்,

சிறந்த காவலாளியாக டி.பாஸ்கரன்,

சிறந்த தீயணைப்பு பிரிவு ஊழியராக எஸ். பிரியதர்ஷன்,

சிறந்த நேர்மையான உத்தியோகத்தராக எம்.ஏ.சாபிர்,

சிறந்த சப்போர்டிங்க் உத்தியோகத்தராக எம்.எச்.ஏ.றியாஸத்

ஆகியோரே இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களாவர்.

இவர்களுள் வேலைத் தொழிலாளியான ஆர்.இன்பராஜா என்பவர், கல்முனை மாநகர சபையின் இந்த ஆண்டுக்கான அதிசிறந்த ஊழியராக தெரிவு செய்யப்பட்டு, விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர்களுடன் ஒவ்வொரு துறையிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூவர் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர்.

அத்துடன் இம்முறை ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சை மற்றும் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 05 மாணவர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் என்ற ரீதியில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்படி 9A சித்தி பெற்ற முபாறக் அப்துல் லைஸ் மற்றும் 8A, B சித்தி பெற்ற அப்துல் ஹலீம் ஜௌஸி அஹமட் ஸைட் குதுப் ஆகியோரும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முஹமட் நஜீம் முஹம்மட் நுபைல் நஹி (164), அழகுராஜா தனுஷினி (154), முஹம்மட் றியாஜத் அறைஸ் அம்ஹர் (149) ஆகியோருமே கெளரவிக்கப்பட்ட மாணவர்களாவர்.

மேலும், கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற பொறியியலாளர் என்.சர்வானந்தன், பட வரைஞர் எல்.ரி.எம். முபாறக், நூலகர்களான திருமதி எஸ்.என்.எம். சித்தீக், திருமதி நஸ்லியா காசிம், வருமான பரிசோதகர்களான எம். சலீம், கே. குணரட்னம், ஏ. புவனேந்திர ராஜா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களான எம்.எம்.ஜௌபர், திருமதி எஸ்.நேசசிறி, திருமதி ஐ.எல்.எஸ். ஹனூன், திருமதி எஸ். அமானுல்லாஹ் உட்பட 31 பேரின் சேவைகளை பாராட்டி, நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் முதலாவது ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் இறுதியாக கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராகவும் பணியாற்றி, நிர்வாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எம்.வை. சலீம் இந்நிகழ்வுக்கு விசேட விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இவருக்கு மாநகர ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கூட்டாக பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவமளித்தனர்.

மேலும், மாநகர சபையின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற திண்மக்கழிவகற்றல் சேவையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் வேலைத் தொழிலாளர்களுக்கு இதன்போது ஊக்குவிப்பு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதேவேளை மாநகர சபையை பொறுபேற்று குறுகிய காலத்தினுள் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மாநகர சபையை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைத்து, அதனை முன்னிலைக்கு கொண்டு வந்து, உன்னத சேவையாற்றி வருகின்ற மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள், மாநகர சமூகத்தின் சார்பில் முன்னாள் மாநகர ஆணையாளரும் முன்னாள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான எம்.வை. சலீம் அவர்களினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவ்விழாவில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் வரவேற்புரையையும் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி வாழ்த்துரையையும் ஓய்வுநிலை நிர்வாக சேவை அதிகாரி எம்.வை.சலீம் சிறப்புரையையும் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான என். பரமேஸ்வர வர்மன் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.

இதன்போது மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பிக்கச் செய்ததுடன் சபையோரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

விழா நிகழ்வுகளை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஜாபீர் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் மாநகர சபையின் கணக்காளர் கே.எம்.றியாஸ் மற்றும் பிரிவுத் தலைவர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.