Tuesday, July 25, 2023

கடல்சார் சூழல் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்.!

-சாய்ந்தமருது செய்தியாளர்-

கடல்சார் சூழல் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை (25) கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஒருங்கிணைப்பில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகள் மாசுபடுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கடற்கரையோரப் பகுதிகளில் அன்றாடம் சேர்கின்ற திண்மக்கழிவுகள் மாநகர சபையினால் தினசரி கிரமமாக அகற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய மாநகர ஆணையாளர், பொது மக்கள் கடற்கரை பகுதிகளில் குப்பை கொட்டுவதைத் தவிர்ந்து நடக்கும் வகையில், அவர்கள் விரும்பக் கூடிய எழில்மிகு இடங்களாக அவற்றை மாற்றியமைப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கேற்ப பொருத்தமான திட்டமொன்றை வரைந்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைமையகத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக அம்பாறை மாவட்ட உதவி கடல்சார் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எச்.மொஹிதீன் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மீர், மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.அமீர், எம்.ஏ. நிஸார், வி.சுகுமார், திருமதி எம்.ஆர்.எம். அபார், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஜே,எம். நிஸ்தார், ஏ.எல்.எம். ஜெரீன், ஏ.எம்.பாறுக், எம்.ஜுனைதீன், சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.சி.எம்.ஐயூப் மற்றும் சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கரையோரம் பேணல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கடற்றொழில் திணைக்களம், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவு மேற்பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.



























Monday, July 24, 2023

கிழக்கில் 700 ஆசிரியர்களை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை; கல்வி அமைச்சர் சுசில் அனுமதி.!

ஏயெஸ் மெளலானா

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனுமதி வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை இன்று திங்கட்கிழமை (24) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வனுமதி வழங்கப்பட்டிருப்பதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக செந்தில் தொண்டமானால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை அமைச்சர் சுசில், ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்படாத உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளின்  நியமனம் தொடர்பாகவும்  இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Friday, July 21, 2023

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா.!

-ஏயெஸ் மௌலானா-

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு வைபவமும் எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை

காலை 9.00 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த கொடைவள்ளல் ஐயூப் அஸ்ஸர் ஊனி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இதன்போது காத்தான்குடி ஜாமியா சித்தீக்கியா அரபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூர் மதனி அவர்கள் பட்டமளிப்பு பிரசங்கத்தை நிகழ்த்தவுள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவில் 04 Batch தொகுதிகளைச் சேர்ந்த 31 மாணவிகள், மெளலவியா பட்டத்தை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

அத்துடன் இவர்களுள் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்விக் கல்லூரி என்பவற்றுக்கு அனுமதி பெற்று, உயர் கல்வி கற்கும் 19 மாணவிகள், விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

மேலும், கல்லூரி மட்ட பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் பலர், பரிசு வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாக விழா ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

கடந்த 2012-04-12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 2018.09.23 ஆம் திகதி இடம்பெற்றது. அதன்போது 09 மாணவிகள், மெளலவியா பட்டத்தை பெற்றிருந்தனர்.

அன்றைய தினம் இக்கல்லூரிக்கான புதிய கட்டிடத் தொகுதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thursday, July 20, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம்.!


-அபு அலா

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று (19) கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத மீன்பிடித்தல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடு, மனித கடத்தல், மான் பூங்காக்கள் மீதான கண்காணிப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண இராணுவத் தளபதி,  கிழக்கு மாகாணத்தின் கடற்படை ரியர் அட்மிரல், கிழக்கு மாகாணத்தின் விமானப்படை தளபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.










♦️Hon. Senthil Thondaman, Governor of Eastern Province chaired the Security Council Meeting!

Security Council of Eastern Province was gathered under the Chairmanship of Hon. Senthil Thondaman at the Governor's Secretariat in Trincomalee, (19) yesterday.

Deputy Inspector General of Police - Eastern Province  and Army Commander - Eastern Province,  Naval Rear Admiral  were participated in the meeting  and  discussed the issues of Law and Order , Tourist  Safety, Illegal Drug Supply, Illegal fishing, Anti-Environmental Activities, Human Trafficking, Monitoring of  Deer Parks, Current  Security situation of the Province  and the future measures  for  the Eastern Province.

♦️ආරක්ෂක මණ්ඩල රැස්වීම නැගෙනහිර පළාත් ගරු ආණ්ඩුකාර සෙන්තිල් තොණ්ඩමාන් මහතා ගේ  ප්‍රධානත්වයෙන්! 

නැගෙනහිර පළාත් ආරක්ෂක කවුන්සිලය ගරු සභාපතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් රැස් විය. 

ගරු ආණ්ඩුකාර සෙන්තිල් තොණ්ඩමාන් මහතාගේ ප්‍රධානත්වයෙන් ඊයේ (19) ත්‍රිකුණාමලයේ පිහිටි ආණ්ඩුකාර ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.

මෙම රැස්වීමට නැගෙනහිර පළාතේ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා සහ නැගෙනහිර පළාතේ යුධ හමුදාපති, නාවික හමුදා රියර් අද්මිරාල් මහතා සහභාගී වූ අතර, නීතිය හා සාමය, සංචාරක ආරක්ෂාව, නීති විරෝධී මත්ද්‍රව්‍ය සැපයීම, නීති විරෝධී මසුන් ඇල්ලීම, පරිසර විරෝධී ක්‍රියාකාරකම්, මිනිස් ජාවාරම, යන ගැටළු පිළිබඳව සාකච්ඡා කරන ලද අතර මුවන් උද්‍යාන නිරීක්ෂණය කිරීම, පළාතේ වත්මන් ආරක්ෂක තත්ත්වය සහ නැගෙනහිර පළාතේ ඉදිරි ක්‍රියාමාර්ග පිළිබඳව වැඩිදුරටත් සාකච්ඡා කළේය.

Saturday, July 8, 2023

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்; ரஹ்மத் மன்சூர் தலைமையில் பொதுநலத் திட்டங்கள் அங்குரார்ப்பணம்.!


(ஏயெஸ் மெளலானா)

பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி நேற்று அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, பல்வேறு பொது நலத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

வை.டபிள்யு.எம்.ஏ. (YWMA) பேரவையின் அழைப்பின் பேரில், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் நிதி ஒதுக்கீட்டில் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட குழாய்க் கிணறுகள் மற்றும் பொதுக் கிணறுகள் இதன்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் திறந்து வைக்கப்பட்டன.

அத்துடன் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் பார்வையிட்ட உயர்ஸ்தானிகர், அவர்களது தேவைப்பாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள், மென்பந்து கிரிக்கெட் துடுப்பு மட்டைகள், கால்பந்துகள் என்பவற்றையும் வழங்கி வைத்தார்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும்  கலந்து கொண்டு உரையாடினார். சுமார் 80 வருட வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளவிருப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் சார்பில் நினைவுச் சின்னம் ஒன்றும் உயர்ஸ்தானிகருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், உயர்ஸ்தானிகரும் ரஹ்மத் பவுண்டேஷனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கெளரவித்தார்.