Thursday, September 16, 2021

அன்னமலை வைத்தியசாலையில் மருத்துவர் விடுதி திறப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதியொன்று இன்று (16) திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் அனுர பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் அதிதியாகக் கலந்து இதனைத் திறந்து வைத்தார்

இவ்வைத்தியசாலையில் நீண்ட காலமாக புனரமைப்பின்றி கைவிடப்பட்டிருந்த பழைய விடுதிக் கட்டடம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக புனரமைப்பு செய்யப்பட்டே இவ்விடுதி திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் விடுதிக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தூர இடங்களில் இருந்து வருகின்ற வைத்தியர்கள் தங்குவதற்கென இவ்வைத்தியசாலையில் விடுதியொன்று இல்லாததன் காரணமாக இங்கு நியமிக்கப்படுகின்ற வைத்தியர்கள், குறுகிய காலத்தினுள் இடமாற்றம் பெற்றுச் செல்வதால், வைத்தியசாலை சீராக இயங்க முடியாத நிலைமை இருந்து வந்தது. இதனை வைத்தியசாலை அபிவிருத்தி சபை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் தங்க வடிவேல், வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் தலைவர் சி.கணபதிப்பிள்ளை உட்பட நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.


metromirrorweb@gmail.com

Wednesday, September 15, 2021

சாய்ந்தமருது வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை நிலையம் திறப்பு..!

(அஸ்லம் எஸ்.மெளலானா, எம்.ஐ.சம்சுதீன் )

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான விடுதிகள் இன்று புதன்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் பதில் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எச்.கே.சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் கலந்து கொண்டு இவ்விடுதிகளை திறந்து வைத்தார்.

இங்குள்ள கட்டடங்கள் சுமார் 09 லட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சைக்கென 02 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆண், பெண் கொரோனா தொற்றாளர்களுக்கென தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்விடுதிகளில் கொவிட் நோயாளிகளுக்கான 50 கட்டில்கள் மற்றும் தாதியர்களுக்கான ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளிலுள்ள கொவிட்-19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி காரணமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் இவ்விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது கல்முனைப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள 05ஆவது கொரேனா சிகிச்சை நிலையமாகும்.

இதனைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.வாஜித், கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ், சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளான டாக்டர் திருமதி சிவாசுப்ரமணியம், டாக்டர் திருமதி எஸ்.ஜே.ஜஹான் உட்பட நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

Monday, September 13, 2021

மஜ்மா நகர் மைய­வா­டிக்கு மேலதிக காணி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது..!


ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தொடர்ந்தும் நல்­ல­டக்கம் செய்­வதில் எவ்­வித பிரச்­சி­னை­யு­மில்லை. மைய­வா­டிக்கு தேவை­யான காணி­யினை நான் பெற்றுக் கொடுத்­துள்ளேன். நான் அபி­வி­ருத்தி குழுவின் தலை­வ­ராக இருக்கும் வரை மைய­வா­டிக்கு தேவை­யான காணி­களை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள நட­வ­டிக்கை எடுப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் அஹமட் தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் கொவிட் 19 மைய­வாடி தொடர்பில் விளக்­கங்கள் கோரிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியின் பாதை உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­காக அர­சாங்கம் 68 மில்­லியன் ரூபாவை ஒதுக்­கி­யுள்­ளது. இதற்கு நிதி­ய­மைச்சர் பஷில் ராஜ­பக்ஷ அனு­மதி வழங்­கி­யுள்ளார். விரைவில் பாதை உட்­கட்­ட­மைப்பு பணிகள் ஆரம்­பிக்­கப்­படும்.

புதி­தாக மைய­வா­டிகள் இனங்­கா­ணப்­பட்டால் அதற்­கான உட்­கட்­ட­மைப்பு வச­திகள் பாதை வச­தி­களை அமைப்­ப­தற்கு அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நிதி­யினைப் பெற்­றுக்­கொள்ள முடியும். அந்த வகையில் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்­கான பாதை உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு 68 மில்­லியன் ரூபா அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான காணி­களை பெற்றுக் கொடுப்­பது எனது பொறுப்­பாகும். அதனால் மக்கள் இது தொடர்பில் கவலை கொள்ளத் தேவை­யில்லை. ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்ய முடி­யாமற் போகுமோ எனப் பயப்­ப­டா­தீர்கள். அல்­லாஹ்வின் உத­வி­யினால் நான் அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் மேற்கொள்வேன்’ என்றார்.

யார் எதிர்த்தாலும் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும்; அமைச்சரவை உறுதி என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி..!

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

யார் எதிர்த்­தாலும் இலங்­கையில் காதி நீதி­மன்­றங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­ட­வுள்­ளன. முஸ்­லிம்­களின் விவா­க­ரத்து உட்­பட குடும்ப விவ­கா­ரங்­களை பொது நீதி­மன்­றங்­களே கையா­ள­வுள்­ளன. இதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை ஏக­ம­ன­தாக வழங்­கி­யுள்­ளது. 30 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் நான் ஒரு­வனே முஸ்லிம். அதுவும் நான் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வ­னல்ல. நான் தேசியப் பட்­டியல் உறுப்­பினர்- என நீதி­ய­மைச்சர் அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.

காதி நீதி­ப­திகள் போரத்தின் நிர்­வா­கி­க­ளுடன் சூம் செய­லி­யூ­டாக மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­டலின் போதும், தமிழ் ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லிலும் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

காதி நீதி­மன்ற முறை­மையை தக்க வைத்­துக் ­கொண்டு முஸ்லிம் தனியார் சட்­டத்தில் சில திருத்­தங்­களைச் செய்­வ­தற்கே நான் தீர்­மா­னித்­தி­ருந்தேன். ஆனால் அமைச்­ச­ரவையானது முஸ்­லிம்கள் ஏனைய பொது நீதி­மன்­றத்­துக்குள் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்றும் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான சட்டம் தேவை­யில்லை எனவும் பல­தார மணம் இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும் என்றும் உறு­தி­யான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டுள்­ளது. அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்தை என்னால் மீற முடி­யாது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை திருத்த வேண்டும் என பலர் கூறு­கி­றார்கள். இதே­வேளை ஒரு தரப்­பினர் இச்­சட்­டத்தில் மாற்­றங்கள் தேவை­யில்லை என்­கி­றார்கள். ஆனால் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கும், காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­வ­தற்கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இச்­சட்டம் அமு­லாக்­கப்­படும் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. இதனை எவ­ரா­வது ஏற்றுக் கொள்­ளா­விட்டால் உயர் நீதி­மன்­றுக்குச் செல்­லலாம்.

நான் எடுத்த தீர்­மா­னத்தை இலே­சாக கைவி­டு­ப­வ­னல்ல. நான் யாருக்கும் பயப்­ப­டு­ப­வ­னு­மல்ல. எங்­க­ளது அர­சாங்கம் பற்றி எல்­லோ­ருக்கும் தெரியும். சிங்­கள பௌத்­தர்கள் 98 – 99 வீதத்­தினர் எங்களுக்கு வாக்களித்தார்கள். இலங்கையர் என்ற அடையாளத்தின் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களே. இதற்காகவே நாம் போராடுகிறோம்- என்றார்.

நன்றி: விடிவெள்ளி

Thursday, September 9, 2021

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கொரோனா பிரிவுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலைக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கடல் கடந்து வாழ் கல்முனை உறவுகளினால் வழங்கி வைக்கப்பட்டது. 

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலையில் அமையப் பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு சில மருத்துவ உபகரணங்களின் அவசியத்தேவை கருதி வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய "எமது உறவுகளை பாதுகாக்க நாமும் பங்காளராவோம்" எனும் தொனி்பொருளில் கல்முனைக்கான வளைகுடா அமையத்தினால் 12,54,000 ரூபாய் பெறுமதியான Non-Intensive Ventilator (CPAP & BiPAP) - 01, Pulse oximeter - rossmax -06 மற்றும் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த ஜப்பான் நாட்டில் வசிப்போரின் நிதி பங்களிப்புடன் 12,00,000 ரூபாய் பெறுமதியான Non-Intensive Ventilator (CPAP & BiPAP) -01 வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமான் அவர்களிடம் குறித்த அமைப்பின் உறுப்பினர்களால் இன்று உத்தியோகபூர்வமாக அன்பளிப்பு செய்யப்பட்டது.

இதன்போது வைத்தியர்களான எம்.எம். ஹபிலுல் இலாஹி , ஏ.ஆர்.எம். ஹாரிஸ், ஏ.எல்.பாறுக், என். சுகைப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் குறித்த அமைப்பினருக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். றகுமான் தனது நன்றியினை தெரிவித்தார்.






Monday, September 6, 2021

ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கிற்காக இன்று அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதில் தடுப்பூசியேற்றும் பணி நாளை மீண்டும் ஆரம்பம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொவிட் தடுப்புக்கான இரண்டாவது தடுப்பூசியை இதுவரை பெறாத மற்றும் ஏனையோர்களுக்குமான தடுப்பூசியேற்றும் பணிகள் நாளை செவ்வாய் (07-09-2021) மற்றும் புதன் (08) ஆகிய இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவிருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்துள்ளார்.

இவ்விரு தினங்களிலும் முற்பகல் 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை 04 நிலையங்களில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/ அல்-ஜலால் வித்தியாலயம் ஆகியவற்றில் தமது கிராம சேவகர் பிரிவுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலையமொன்றில் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதலாவது தடுப்பூசியைப் பெற்றவர்கள் கட்டாயம் தடுப்பூசி அட்டையைக் கொண்டு வருமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுள்ளார்.


metromirrorweb@gmail.com

Whatsapp: 0779425329


Sunday, September 5, 2021

தலிபான் அமைப்­பினால் இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் வலுப்­பெறும்..!

தப்லீக் ஜமாஅத்தையும் தடை செய்ய வேண்டும் என்கிறார் ஞான­சார தேரர்..!

ஆப்­கா­னிஸ்­தானில் மீண்டும் எழுச்சி பெற்­றுள்ள தலிபான் அமைப்­பினால் இலங்­கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்­றுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் வலுப்­பெறும். தப்லீக் ஜமாத் அமைப்பை அர­சாங்கம் தடை செய்­வ­துடன், இஸ்­லா­மிய அடிப்­ப­டைவாத கொள்­கை­யு­டைய அமைப்­புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்னர் நாட்டில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் முற்­றாக இல்­லாமல் போயுள்­ளது என்று ஒரு­போதும் கருத கூடாது என பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையிலே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஆப்­கா­னிஸ்தானில் தலிபான் அமைப்பு மீண்டும் ஆட்­சி­ய­தி­கா­ரத்தை போராட்­டத்தின் ஊடாக கைப்­பற்­றி­யுள்­ளது. தலி­பான்கள் இறுக்­க­மான மத கொள்­கை­யி­னையும், மதத்தின் பெயரில் அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­டு­பவர்கள் இறுக்­க­மான மத கொள்­கை­க்கு எதிர்ப்பு தெரி­வித்தே அந்­நாட்டு மக்கள் அபா­ய­க­ர­மான நிலையில் நாட்டை விட்டு வெளி­யே­று­கின்­றதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

தலிபான் அமைப்­பின் மீள் எழுச்சி இலங்­கையில் தற்­போது 70 வீத­ம­ளவில் ஆதிக்கம் பெற்­றுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளுக்கு சாத­க­மாக அமையும்.

தலிபான் அமைப்பின் கொள்­கையால் ஈர்க்­க­ப்பட்­டுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இலங்­கை­யிலும் உள்­ளன. குறிப்­பாக தப்­லீக்­ ஜமாஅத் அமைப்பை குறிப்­பிட வேண்டும். இந்த அமைப்பை அர­சாங்கம் உட­ன­டி­யாக தடை செய்ய வேண்டும். அத்­துடன் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­யு­டைய அமைப்­புக்கள் குறித்தும் அதிக கவ­னம் ­செ­லுத்­தப்­பட வேண்டும்.

இலங்­கையில் வாழும் சுதேச பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கைக்கும், மதத்தின் பெயரை குறிப்­பிட்டுக் கொண்டு தவ­றான புரி­தல்கள் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­க­ளுக்கு கடு­மை­யான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். இருப்­பினும் இலங்­கையில் வாழும் முஸ்லிம் மக்­களின் தலை­மைகள் என்று குறிப்­பிட்டுக் கொள்­ப­வர்கள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத கொள்­கை­க­ளினால் ஈர்க்­கப்­பட்­டுள்­ளார்கள்.இவர்கள் குறித்து முதலில் முஸ்லிம் மக்கள் ஒரு தீர்வை எடுக்க வேண்டும்.

இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் பகி­ரங்­க­மாக செயற்­ப­டு­கி­றது என்­று ­பலமுறை ஆதா­ரத்­துடன் வெளிப்­ப­டுத்­தினோம். எமது கருத்தை முஸ்லிம் சமூக தலை­வர்கள் இன­வாத கோணத்தில் கருதி எம்மை இன­வா­திகள் என்றும், முஸ்லிம் சமூக விரோ­திகள் என்றும் சித்­த­ரித்து அடிப்­ப­டை­வா­தி­களை பாது­காத்­தார்கள். விளைவு ஏப்ரல் 21 குண­டுத்­ தாக்­கு­த­லுடன் வெளி­யா­னது.

மதத்தின் பெய­ரி­னாலும், தவ­றான போத­னை­க­ளி­னாலும் பயங்­க­ர­வா­தி­க­ளினால் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதனால் ஒட்­டு­மொத்த முஸ்லிம்களும் அன்று பாதிக்­கப்­பட்­டார்கள். இன்றும் அதன் விளைவு தொடர்கிறது.

ஏப்ரல்-21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் இல்லை என்று கருத முடியாது. ஆகவே அரசாங்கம் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை கருத்திற் கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்- என்றார்.

-Vidivelli

Friday, September 3, 2021

சாய்ந்தமருது MPCS மூலம் 1500 கிலோ சீனி விநியோகம்; கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகளுக்கு, தலைவர் உதுமாலெப்பை நன்றி தெரிவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் (MPCS) ஊடாக இப்பிரதேச மக்களுக்கு நிர்ணய விலையில் சீனியை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி மற்றும் கல்முனைப் பிராந்திய கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.உதயராஜா ஆகியோருக்கு சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்கத் தலைவர் ஏ.உதுமாலெப்பை நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேற்படி அதிகாரிகளின் ஒத்துழைப்பு காரணமாக சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று முதல் சீனியை அரசாங்கத்தின் நிர்ணய விலையான 125 ரூபாவுக்கு வழங்கி வருகின்றோம்.

இவர்களது முயற்சியினால் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 15,000 கிலோ சீனி அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் எமது சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு 1500 கிலோ சீனி கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக குறித்த அதிகாரிகள் உட்பட சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் எமது கூட்டுறவுச் சங்கத்தில் பருப்பு, கோதுமை, பிஸ்கட், எண்ணெய், தேயிலை உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொது மக்கள் ஆர்வத்துடன் இவற்றைக் கொள்வனவு செய்து வருகின்றனர். அதேவேளை, தற்போது பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்ற பால்மா வகைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

சீனி மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்து வருகின்ற போதிலும் இங்கு கொவிட்-19 தடுப்பு சுகாதார வழிமுறைகளுடன் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன- என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


metromirrorweb@gmail.com


Thursday, September 2, 2021

ரிஷாட் பதியுதீனிடமிருந்து கைத்தொலைபேசி மீட்பு..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து அலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனை, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க  தெரிவித்துள்ளார்.

சிறைக்காவலர்கள் அவரது சிறைக்கூடுக்கு அருகில் சென்ற போது, அலைபேசி வெளியில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் நேற்று (01) மீட்கப்பட்ட அலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவினரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடு குறித்து, பாராளுமன்ற உறுப்பினரை சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



முடக்கம்: நடுத்தர வர்க்கம் நலிந்து போனாலும் நடுத்தெரு வராது..!

Mohamed Nizous

முடக்கம் வந்தால்
கிடைக்கும் உதவியில்
எடுக்கும் கூட்டம்
ஏதோ வாழும்..

செல்வக் கூட்டமும்
சிரமங்கள் இன்றி
உள்ளிருந்து கொள்ளும்
உள்ளதால் வாழும்..

எனினும் அவதியில்
இடைத்தரம் மாட்டும்
தானாய்ப் போராடும்
தன் கஷ்டம் மறைக்கும்..

நடுத்தர வர்க்கம்
நலிந்து போனாலும்
நடுத்தெரு வராது
அடுத்தவர் அறியார்..

பொல்லாத கெளரவம்
பொல்லோடு நிற்க
சொல்லாது மறைப்பார்
சோறுமில்லா நிலையை..

பார்ப்பவர் நினைப்பார்
பக்கா வாழ்வென
யார்க்கும் இவர் நிலை
இலகுவில் புரியாது..

அன்றாடம் உழைத்து
அதில் வரும் லாபத்தில்
நன்றாக வாழ்ந்தவர்
நாதியின்றி நிற்பார்..

ஆறேழு நாட்கள்
அப்படி இப்படி
போராடி சமாளிப்பார்
ஊரார் அறியார்..

ஆனால் தொடர்ந்து
அதே நிலை இருந்தால்
தான் பசி இருப்பார்
தன் பிள்ளை வயிறார..

இவர்களை அறிந்து
இரகசியமாய் உதவல்
சுவர்க்கத்தை தரும்
கவனத்தில் கொள்வோம்..!

ஷியா, சுன்னி மோதல்கள் எதுவரை எதிரொலிக்கும்? காபூல் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்..!


-சுஐப் எம்.காசிம்-

மேலைத்தேயம் விரும்பும் முஸ்லிம் நாடுகளில் அமைதி ஏற்படுமா? என்று சந்தேகம் எழுமளவுக்கு ஷியா, சுன்னி மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன. மட்டுமல்ல, விரும்பாத நாடுகளிலும் நெருக்கடிகள் நின்றபாடில்லை. முஸ்லிம் உலகில் ஏற்பட்டுள்ள இந்தக் கவலை முழு உலகையும் வியாபிக்கும் நிலையில்தான், இதன் விஸ்வரூபம் தலைவிரித்தாடுகிறது.

சுமார், ஐம்பது இஸ்லாமிய நாடுகளுள்ள இந்த உலகில் முஸ்லிம்களின் சனத்தொகை இரண்டாமிடத்திலுமுள்ளது. இதற்குள்தான், இத்தனை பிளவுகளால் முஸ்லிம் உலகு திண்டாடுகிறது. இந்தத் திண்டாட்டம் சில ஏகாதிபத்தியவாதிகளுக்கு கொண்டாட்ட மாகவுள்ளதையும் நாம் மறக்க முடியாது.

அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள், சுன்னி நாடுகள், ஷியா நாடுகள் என விரியும் இந்தப் பிளவுகள்தான் இன்றைய விரிசலுக்கும் காரணம். முஸ்லிம்களின் இறுதிக் கடமையான "ஹஜ்" வணக்கத்திலும் இந்த விரிசலின் சாயல் இருக்கத்தான் செய்கிறது.

"மினாவில்" தங்குவதற்கான கூடாரங்களில், அரபு நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததை, ஆசிய நாடுகளுக்கான கூடாரத்திலிருந்த நானும் கண்ணுற்றதை, இந்த இடத்தில் என்னால் பதிவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கிறது.

ஆகஸ்ட் 15 இல், ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றிய பத்து நாட்களின் பின்னர், காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலும் இந்தப் பிளவுகளின் பின்னணிகளில் ஒன்றுதான்.

சுன்னி முஸ்லிம்களான தலிபான்களின் அரசாங்கத்தை எச்சரித்த Islamic State of Khorasan Province (I.S.K.P) எனும் ஷியா முஸ்லிம் அமைப்பு அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, நோர்வே மற்றும் நியூஸிலாந்து நாடுகளைப் பழிவாங்கி உள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த (இதுவரைக்கும்) 78 பேரில், 13 அமெரிக்கர்கள், 28 தலிபான்கள் பழிவாங்கப்பட்டுள்ளமை இந்தக் கொடூரத்தின் இலட்சியத்தை துல்லியப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் இருபது வருடப் பிரசன்னத்தில், 2011 இல் நடத்தப்பட்ட "சினொக்" ஹெலிகொப்டர் தாக்குதலில், 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னர் ஏற்பட்ட பெரிய இழப்பு இது. சிரியா, யெமன், ஈராக் மற்றும் லெபனான் உள்ளிட்ட சில நாடுகளில், "ஷியா" முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் நேட்டோ நாடுகளின் தாக்குதல்களுக்கான பழிவாங்கலாக இத்தாக்குதல் பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின், கொரோசான் மாகாணத்திலுள்ள ஷியா அமைப்புத்தான் (I.S.K.P) இதற்குப் பின்னால் உள்ளது. சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள ஆப்கானிஸ்தானில், ஷியாக்களின் எழுச்சிக்காகப் புறப்பட்டுள்ள இந்த அமைப்பு, தலிபான்களின் அரசை எச்சரித்துள்ளதுடன், நேட்டோ நாடுகளின் நேசத்தை துண்டிக்குமாறு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத தலிபான்கள், விமான நிலையம் பூரண கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதுடன், வெளிநாட்டினர் வெளியேறும் கால எல்லை, இம்மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் நீடிக்கப்படாதென அறிவித்துமுள்ளனர்.

metromirrorweb@gmail.com

எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும்; இராதாகிருஷ்ணன் கருத்து


(க.கிஷாந்தன்)

எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று இலங்கையில் நான்கவது கொரோனா அலை தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையினுடைய பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதனால் அன்றாடம் கூலி தொழில் செய்யும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

அரசாங்கத்தினால் 2000 ரூபாய் வழங்கும் திட்டம் மக்களுக்கு முறையாக சென்றடையவில்லை.

கடந்த காலத்தில் 5000 ரூபாய் 53 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை 17 இலட்சம் பேருக்கே 2000 ரூபாய் வழங்க நேர்ந்துள்ளது.

அத்தோடு தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த 2000 ரூபாய் முறையாக அவர்களின் கைகளுக்கு கிடைப்பதில்லை. இது தொடர்பாக பல முறைபாடுகளும் கிடைக்கப்பபெற்றுள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த பணத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நாட்டில் பொருட்களின் விலைவாசி ஆகாயத்தை தொடுகின்ற சூழ்நிலையில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாகவும், விலைவாசி அதிகரிப்பு காரணமாகவும் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எதிர்வரும் காலங்களில் இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என அவர் கருத்தில் மேலும் தெரிவித்தார்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 170,000 கிலோ சீனி மீட்பு; பாவனைக்குதவாத 11070 மெட்ரிக் தொன் சீனியும் கண்டுபிடிப்பு..!

குருணாகலை உயன்தன பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 170,000 கிலோ கிராம் சீனித் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று 04 களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி, அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.

வத்தளை பகுதியில் கடந்த 08 மாதங்களாக பதுக்கி வைக்கப்பட்டு, பாவனைக்குதவாத சீனியாக மாறியுள்ள 11070 மெட்ரிக் தொன் சீனி கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

சாய்ந்தமருதில் 20943 கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தில் இதுவரை 20943 கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் முடிவுற்றிருப்பதால் இன்று வியாழன் (02) தடுப்பூசியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வில்லை எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல்அமீன் றிசாட் தெரிவித்தார்.

இவற்றுள் 14037 பேருக்கு முதலாவது தடுப்பூசியும் 6906 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும். செலுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 03 நாட்களில் மாத்திரம் 7500 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் நடவடிக்கை கடந்த திங்கள் (30) தொடக்கம் நேற்று புதன் (01) வரை 04 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இதனை 04 நாட்களுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தபோதிலும் கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் புதன்கிழமை நண்பகலுடன் முடிவுற்றதால் இன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாலேயே இவ்வாறு குறுகிய காலத்தினுள் தடுப்பூசிகள் முடிவுற்றுள்ளன.

எவ்வாறாயினும் இப்பிரதேசத்தில் தடுப்பூசி பெற தவறியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக விரைவில் மீண்டும் இடம்பெறும். அதற்கான கால, நேர, இடங்கள் பற்றிய விபரங்கள் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்- என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அல்அமீன் றிசாட் தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஆளணியினர் உள்ளிட்ட வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டிருந்த நேர்த்தியான ஏற்பாடுகளுடன் இப்பிரதேசத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இச்சிறப்பான ஒழுங்குபடுத்தல் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்காமல் நெரிசல், கால தாமதம் எதுவுமின்றி ஒவ்வொருவரும் சில நிமிடங்களுக்குள்ளேயே தடுப்பூசியைப் பெற்று வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.

metromirrorweb@gmail.com

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய மீலாத் போட்டிகள்..!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியாக வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் தேசிய மீலாத் போட்டி நிகழ்ச்சிகளை கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இவ்வருடம் (2021) நடாத்துவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கிராஅத், சிங்களப் பேச்சு, தமிழ் பேச்சு, ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள். திறந்த கவிதை போட்டி. அதான்போட்டி மற்றும் ''அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப் பிரபஞ்சதிற்கே ஓர் அருட்கொடையாவார்கள்' எனும் கருப்பொருளில் ஒரு காணொளி போட்டி நிகழ்ச்சியினையும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் தங்களது ஆக்கங்களை (கிராஅத், சிங்களப் பேச்சு, தமிழ் பேச்சு, ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள், திறந்த கவிதை போட்டி, அதான் போட்டி மற்றும் காணொளி போட்டி  (Vidio Compertion) நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பப்படிவத்தினையும்  அந்தந்தப் போட்டிகளுக்கான விதிமுறைகள், ஒவ்வொரு போட்டிகளுக்கான  (Google link) உட்பட போட்டி பற்றிய முழுமையான விபரங்களையும் அறிந்து கொள்ள,  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  Website : www.muslimaffairs.gov.lk  என்ற இணைய முகவரி உடாக அல்லது  DMRCASrilanka  என்ற முகநூல் முகவரி ஊடாகவும் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

நிகழ்ச்சியினை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்து குறிப்பிட்ட நிகழ்நிலை (online)    போட்டிகளுக்கான குறியீட்டு இலக்கங்கள் மற்றும் விண்ணப்பி;க்க வேண்டிய நிகழ்நிலை (online) முகவரியில் மாத்திரம் பதிவேற்றப்படல் வேண்டும்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம்.எல்.எம் அன்வர் அலி தலைமையிலும் உதவிப்பணிப்பாளர் அலா அஹமத் வழிகாட்டிலிலும்  இடம்பெறவுள்ள இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதியாகும் எனவும் இறுதித் திகதிக்கு முன்னர் தங்களது ஆக்கங்களுக்குரிய போட்டிக்கான, கொடுக்கப்பட்டுள்ள (Google link) இல் பதிவேற்றம் செய்யுமாறும் நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எம். முப்தி முர்ஸி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) தெரிவித்தார்.

Wednesday, September 1, 2021

தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் மறைந்த மணவைத் தம்பி ஓர் உறவுப் பாலம்..!

நினைவு தினச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  

தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் சுமுகமான நல்லுறவைப் பேணுவதில் உயரிய பங்களிப்பை செய்த மறைந்த ஏ.எஸ். மணவைத் தம்பியின் பதினான்காவது நினைவு தினத்தை சிறப்பிப்பது பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.   

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது,  

இந்திய துணைக் கண்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ள தமிழ் நாட்டிற்கும், அதிலிருந்து பாக்கு நீரிணையினால் பிரிக்கப்பட்டுள்ள அழகிய இலங்கைத் தீவுக்கும் இடையில் காலத்துக்கு காலம் ஏற்பட்ட அரசியல் தட்ப வெட்ப சூழ்நிலைகளையும்,தளம்பல்களையும் உரியவர்களைத் தொடர்புகொண்டு சமநிலைப்படுத்துவதில் மறைந்த மணவைத் தம்பி பெரிதும் ஒத்துழைத்திருக்கின்றார்.

தமிழ் நாட்டில் மணப்பாடு மீனவக் கிராமத்தில் பிறந்த மணவைத் தம்பி தமது இளம் வயதிலேயே உறவினர்கள் சிலருடன் இலங்கையை வந்தடைந்தார். இங்கு வசித்து வந்த நிலையில், தொழில் புரிந்து கொண்டே தமிழ் அறிவையும், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி அறிவையும் வளர்த்துக்கொண்ட அவர், கட்சி ,மொழி,மத பேதமின்றி இங்கிருந்த அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

அதேவேளேயில், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோரின் அரசியல் ஆளுமையினால் கவர்ந்திழுக்கப்பட்ட அவர், திமுகவின் சீர்திருத்தக் கருத்துக்களை இலங்கையில் போதிய அளவு அறிமுகப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றியிருக்கின்றார். 

இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மை சமூகத்தவருக்கும், நாட்டின் வடக்கிழக்கிலும், மலையகத்திலும் ,ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் புரிந்துணர்வையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதிலும் அன்னார் அதிக கரிசனைகாட்டி வந்துள்ளதாகவும் அறிகின்றேன்.

இலங்கையில் மறைந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஐயா, சௌமிய மூர்த்தி தொண்டமான், செனட்டர் மஷூர் மௌலானா, இராஜதுரை, எமது கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற இன்னும் பலருடனும் அன்னாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

1972 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் அவர் மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட போதிலும், அங்கிருந்து கொண்டே கடல் கடந்து வாழும் இரு நாடுகளினதும் சமூகங்கள் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்துவதற்கு மணவைத் தம்பி முயற்சித்து வந்துள்ளார். 

தமிழகத்தில் தி.மு.க அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அன்னாரை  அங்கு சென்ற போது சந்தித்து உரையாடியுள்ளேன்.

தமது தந்தை மறைந்த ஏ.எஸ். மணவைத் தம்பி விட்டுச் சென்ற பணியை அவரது தனையன் மணவை அசோகன் தொட்டுத் தொடர்கின்றார். அவர்கள் இருவரதும் அயராத முயற்சியைப் பெரிதும் பாராட்டுகின்றேன். புதல்வர் மணவை அசோகன் தமிழக முதல்வர் எமது நண்பர் தளபதி மு.கா.ஸ்டாலினுடனும் நல்லுறவைப் பேணி வருகின்றார்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரஸ்தாப நினைவு தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

-ஊடகப் பிரிவு- 

சாய்ந்தமருதில் கொவிட் தடுப்பூசி நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு; 03 தினங்களில் 7500 பேருக்கு தடுப்பூசி; ஒதுக்கீடு முடிவுற்றதால் நாளை இடம்பெறாது என அறிவிப்பு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் நடவடிக்கை கடந்த மூன்று தினங்களாக 04 நிலையங்களில், கிராம சேவகர் பிரிவு அடிப்படையில் மேற்கொண்டு வந்த நிலையில், கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் இன்றுடன் முடிவுற்றிருப்பதால் நாளை வியாழன் சாய்ந்தமருது பிரதேசத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாலேயே இவ்வாறு குறுகிய காலத்தினுள் தடுப்பூசிகள் முடிவுற்றுள்ளன.

எவ்வாறாயினும் சாய்ந்தமருது 06ஆம், 13ஆம் மற்றும் 17ஆம் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் பொதுவாக இப்பிரதேசத்தில் தடுப்பூசி பெற தவறியவர்களுக்குமான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக விரைவில் மீண்டும் இடம்பெறும்.

அதற்கான கால, நேர, இடங்கள் பற்றிய விபரங்கள் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்- என்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 03 தினங்களிலும் எமது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மொத்தமாக 7500 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்றும்அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்கள் தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஆளணியினர் உள்ளிட்ட வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டிருந்த நேர்த்தியான ஏற்பாடுகளுடன் இப்பிரதேசத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதையிட்டு பொது மக்கள் பாராட்டுத் தெரிவிக்கினறனர்.

இச்சிறப்பான ஒழுங்குபடுத்தல் காரணமாக நெரிசல், கால தாமதம் எதுவுமின்றி ஒவ்வொருவரும் சில நிமிடங்களுக்குள்ளேயே தடுப்பூசியைப் பெற்று வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.



metromirrorweb@gmail.com

கல்முனை, மருதமுனையில் நாளை தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது..!


(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த திங்கள் தொடக்கம் நாளை வியாழன் வரை 04 நாட்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை வரை இடம்பெற்று வந்த நிலையில், கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் முடிவடைந்து விட்டதால், நாளை வியாழக்கிழமை (02) கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறாது  என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகிறேன்.

மீண்டும் தடுப்பூசி கிடைக்கப் பெற்றதும் எமது தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்படும். இது பற்றிய அறிவிப்புக்கள் காலக்கிரமத்தில் மேற்கொள்ளப்படும். குறித்த அறிவிப்பு மேற்கொள்ளும்போது தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

Dr ஏ.ஆர்.எம்.அஸ்மி

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி

கல்முனை மாநகர சபையில் அனைத்து மீன் வியாபாரிகளையும் பதிவு செய்ய நடவடிக்கை..!


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை எல்லையினுள் மீன் விற்பனையில் ஈடுபடுவோரும் வாடிகளை நடத்துவோரும் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.

1956ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகார சபைகள் நியமத்துணை விதிகள் சட்டத்தின் பாகம் 21 மற்றும் 56 இன் கீழ் கல்முனை மாநகர சபை எல்லையினுள் மீன் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் பொருட்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இப்பதிவு நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சந்தை அல்லது ஏதாவது ஓரிடத்தில் மீன் வியாபாரம் செய்பவர்களும் வீதிகளில் நடமாடும் மீன் விற்பனையாளர்களும் மீன் வாடிகளை நடத்துவோரும் எதிர்வரும் 2021-09-15ஆம் திகதிக்கு முன்னர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் மேற்படி நியமத்துணை விதிகளில் கூறப்பட்டவாறு மீன் வியாபாரிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், வருமானப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இதனை மேற்பார்வை செய்து, அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.

மாநகர சபையின் அனுமதி பெறாதவர்களும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோரும் மாநகர சபை எல்லையினுள் மீன் வியாபாரத்தில் ஈடுபடவோ, வாடிகளை நடத்தவோ முடியாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதனை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை மாநகர சபை மேலும் அறிவித்துள்ளது.