Wednesday, September 7, 2022

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்..!


-யூ.கே.காலித்தீன்-

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (07) பாரிய சிரமதான பணிகள் இடம்பெற்றன.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி- பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் அவர்களின் தலைமையிலும் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது வலய திண்மக் கழிவகற்றல் பிரிவின் சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே.காலித்தின் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவினர்,  கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது வலய சுகாதார ஊழியர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரையோர சமுர்த்தி பயனாளிகள் இணைந்து துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

சிரமதான நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை மாநகர முதல்வர், ஆணையாளர், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள், பிரதேச செயலாளர், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சமுர்த்தி கரையோர பயனாளிகளுக்கு சாய்ந்தமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் நன்றியினை தெரிவித்தார்.


No comments:

Post a Comment