Friday, January 7, 2022

மருதமுனை அல்மனாரை தேசிய பாடசாலையாக செயற்படுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு..!


(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்)

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக செயற்படுத்தும் அங்குரார்ப்பண வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோது.

கல்லூரி அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களுடன் கல்முனை வலய கல்வி அலுவலக கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ், பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இக்கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு பங்களிப்பு செய்த அரசியல் தலைமைகள், கல்வி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டதுடன் நிகழ்வின் அதிதிகளை, கல்லூரி அதிபர் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

அரசின் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் திட்டத்தின் கீழ் இக்கல்லூரியும் உள்வாங்கப்பட்டு, தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment